Life imprisonment without remission should be punishment
U.Vasuki, all India secretary, AIDWA.— Photo:B.Velankanni Raj
Existing laws dealing with sexual offences and violence against women should be strictly implemented, said U.Vasuki, all India secretary, All India Democratic Women's Association (AIDWA), on Saturday.
She told presspersons that penal action should be taken against police personnel if they were negligent in implementing these laws.
She also said that Sexual Assault Bill pending in Parliament and Prevention of Sexual Harassment in Workplace Bill should be passed.
With respect to aggravated sexual assault like gang rape and custodial rape, life imprisonment should be the punishment.
The period should not be 14 years but the entire lifetime withoutremission. New law should be enacted incorporating provisions for rehabilitation of victims in acid attack cases. In most of the acid attack cases, rehabilitation is costly and many victims loose eye sight.
She called for enacting separate legislation to deal with honour crimes.
“A group of ministers was functioning to prepare a bill (to deal with honour crimes) in this connection. But this group has now been dissolved.
It should be re-constituted and make suggestions to bring in a separate legislation to deal with honour crimes.”
With respect to Chief Minister Jayalalithaa's suggestions on dealing with rape cases, she said that AIDWA did not support the punishments like death sentence and chemical castration. Earlier, she inaugurated the special conference for girls convened by the Students Federation of India (SFI) to protest suppression of women and violence against women.
A rally was taken out by the girl students in the morning. Periyar statue was garlanded.
நன்றி
CPI(M) candidate U Vasuki bids to be first woman MP from North Chennai
CHENNAI: True to the Leftist style, CPI(M) candidate from North Chennai U Vasuki sips tea at a local shop in one of the narrow lanes of the congested part of the bustling metropolis and hops around meeting voters of various hues in her bid to become the first woman MP from this Lok Sabha segment.
Daughter of senior CPI(M) leaders R Umanath and Pappa Umanath, Vasuki has her task cut out as she has to face two heavyweights of Tamil Nadu politics--DMK and AIADMK, besides actor-politician Vijayakant's DMDK which is part of a six-party coalition.
But the 57 year-old former bank employee seems to have taken the challenge in her stride, banking on the pro-people initiatives by her party's elected representatives, with Perambur, one of the Assembly constituencies under North Chennai, returning CPI(M) MLAs for successive terms.
"CPI(M) has spearheaded movements on a number of issues, including the vexed solid waste management at Kodungayur, bringing some relief to people. The party has also been in the forefront in issues like land acquisition for road projects and we are not new face to the voters here," Vasuki told PTI.
These will convert into votes, the National Vice-President of All India Democratic Women's Association (AIDWA), said.
She points out to DMK shifting its incumbent MP T K S Elangovan to South Chennai Lok Sabha segment this time and claims this was a significant move.
When the discussion turns to the two Left parties walking out of AIADMK alliance over seat-sharing, Vasuki admits that an alliance always adds to the strength of a candidate.
"Even our alliance with AIADMK was for a non-Congress, non-BJP combine post elections. But we will now ask why (AIADMK supremo) J Jayalalithaa is not attacking BJP and what is their agenda," she said.
Vasuki, the party's Central Committee member, sets off on her campaign early in the morning, meeting people from all walks of life and has been interacting with the locals on a slew of issues.
Based on them, her priority will be on developing infrastructure, focus on solid waste management, striving for more educational institutions, work to bring safe drinking water and last of all address unemployment.
Besides reaching people through social media platform also, Vasuki intends to use something unique to North Chennai--'Gaana'-- a colloquial song appealing to the masses, to boost her chances and is all set to unveil her promotional material soon.
செய்தி
பாலியல் கொடுமைகளிலிருந்து- குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்
-உ. வாசுகி
-உ. வாசுகி
இந்தியாவிலும், தமிழகத்திலும் கொடும் பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்கள் நடந்து வருவதை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண் டிருக்கிறோம். கணிசமான குற்றங்களில் பாதிக்கப் படுவது குழந்தைகளே. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாது காக்கும் சட்டம் 2012 என்பது (ஞசடிவநஉவiடிn டிக உாடைனசநn கசடிஅ ளநஒரயட டிககநnஉநள யஉவ), மாநிலங்கள வையில் மே மாதம் 10ம்தேதியும், மக்களவை யில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப் பட்டது. இதற்கான விதிமுறைகளும் உரு வாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி கெஜட்டில் வெளியிடப்பட்டது. இச்சட்டத்தைப் பயன் படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலி யுறுத்தி வருகிறது. அண்மையில் திருப்பூரில் கூடிய மாநிலக்குழு, இக்கோரிக்கை உட்பட இதர கோரிக்கைகளை வலியுறுத்தி, இம் மாதம் 4ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத் திருக்கிறது.
இதுவரை, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவு களின் கீழ் தான் பதிவு செய்யப்பட்டது. இப் பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கை யாண்டன. இது சரியல்ல என்று தொடர்ந்து மாதர் அமைப்புகள் வற்புறுத்தி வந்த பின் னணியில், தற்போதுதான், குழந்தைகளுக் கென தனிச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
சட்டம் சொல்வது என்ன?
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதா வது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக் கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்ற வற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக் கிறது. 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சி யம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத் துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சென்னையில் மாதர்சங்கம் எடுத்த ஒரு வழக்கில், பாதிக்கப் பட்ட சிறுமி வளர்ந்து வாலிபப் பருவம் எய்தி, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு, வழக்கு விசாரணைக்கு வந்தது. எப்படி போய் சாட்சி சொல்லமுடியும்?
சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங் காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்க லாம் என சட்டம் குறிப்பிடுகிறது. சில வகை பாலியல் வன்முறைக்குக் (யபபசயஎயவநன ளநஒரயட யளளயரடவ) கூடுதல் தண்டனை உண்டு. உதார ணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படை யினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர் கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச் சட்டம் தெளிவுபடுத்துகிறது.
மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப் பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அவளின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பி னர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங் கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
குழந்தையின் நலனே பிரதானம்
சிறப்பு நீதிமன்றங்கள் இதற்காக நிறுவப் பட வேண்டும். வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை - புகார் கொடுப்பது, முதல் தக வல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்கு மூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் - பாதிக்கப் பட்ட குழந்தை களின் நலன் மையமாக இருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று சட்டம் கூறுகிறது. உதாரணமாக, “பாதிக்கப்பட்ட சிறுமி/சிறு வரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல் லது அவர்கள் விரும்புகிற இடத்திலோ தான் பதிவு செய்யப் பட வேண்டும். துணை ஆய் வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரி தான் பதிவு செய்ய வேண்டும். அப்போது காவலர் சீரு டையில் அந்த அதிகாரி இருக்கக் கூடாது.”
காவல் நிலையம் என்றால் பெரியவர்களே அலறி ஓடும் போது, பாதிக்கப் பட்ட குழந்தை கள் அங்கு வந்து, மீசையும் மிடுக்குமாய் இருக் கும் ஆணிடம் இதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்துப் பார்த்தாலே கொடுமையாய் இருக்கிறது. இப்பிரிவு சற்று ஆறுதலாய் உள்ளது. பெண் காவலர்கள் எல்லோருமே அனுசரணையாய் இருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது. பொதும்பு வழக்கில், ஒரு பெண் ஆய்வாளர் (விசாரணை அதிகாரி) விசா ரித்த அராஜகம் சொல்ல முடியாது. மாதர் சங் கம் போராடி, அவர் மாற்றப் பட்டார் என்பது வேறு விஷயம். இருந்தாலும், பாலியல் பிரச் சனை என்று சொல்லும் போது, பெண்களாக இருந்தால், குழந்தைக்குப் பகிர்வது சற்று சுலபமாக இருக்கும்.
இரவு நேரத்தில், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது.
குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மருத்துவப் பரிசோதனை, பெற்றோர்/உற் றோரின் முன்னிலையில் செய்யப் பட வேண் டும். பெண் குழந்தை என்றால், பெண் மருத்து வர் செய்ய வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேர்கிற போது, மருத்துவர் கள் காவல் துறை அல்லது நீதி துறையின் உத் தரவைக் கோரக் கூடாது. (அது வந்தால் தான் சிகிச்சை அளிப்போம் என்று சொல்பவர்கள் உண்டு)
வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப் படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.
விசாரணையோ, வழக்கோ, வாக்கு மூலமோ பாதிக்கப் பட்ட சிறுமி/சிறுவரைத் திரும்ப திரும்ப நடந்ததைச் சொல்ல வ ற்புறுத்தக் கூடாது.
குறுக்கு விசாரணை என்ற பெயரில் சங்கடப் படுத்தும் கேள்விகள் அல்லது நடத் தையை சந்தேகிக்கும் கேள்விகளைக் கேட் கக் கூடாது.
குறிப்பிடத் தகுந்த பிரிவுகள்
இச்சட்டத்தில் சில முக்கிய பிரிவுகள் உள்ளன. அதாவது, குற்றம் இழைத்தவர்கள் மட்டுமல்ல, குற்றத்தை செய்யும் நோக்கத் துடன் அதற்காக முயற்சித்தவர்களும் குற்ற வாளிகள் தான். பாலியல் வன்முறை செய்ய, ஒரு சிறுமியை இழுத்துச் சென்றிருக்கலாம். யாரோ வருகிறார்கள் என்பதற்காக விட்டு விட்டு ஓடியிருக்கலாம். பணம் திருடினாளா என்று பரிசோதிக்கவே தனியாக அழைத்து வந்தேன் என்று ஆசிரியர் கூறலாம். வழக்கு வந்தால், குற்றம் நடக்கவில்லையே என்று தப் பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் இச்சட்டம், தப்பிக்கும் வழியை மிகச் சரியாக அடைக்கிறது. குற்றத்துக்கு என்ன தண்ட னையோ, அதில் பாதியை குற்றம் செய்யும் நோக்கத்துடன் முயற்சிப்பவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறுகிறது.
மற்றொரு முக்கிய பிரிவு, பாலியல் வன் கொடுமை குற்றத்தைப் பொறுத்தமட்டில், குற் றம் நடந்தது என்று மனுதாரர் ப்ராசிகியூஷன் தரப்பு நிரூபிக்க வேண்டியதில்லை. குற்ற வாளி தான், தான் குற்றம் செய்ய வில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்று வலி யுறுத்துகிறது.
குற்றம் நடந்தால் புகார் கொடுக்க இன் றைக்கும் பெற்றோர் மத்தியில் தயக்கம் நிலவு கிறது. ஊரும், பெயரும் பகிரங்கப்படுத்தப் படும். அது பெரும் சங்கடத்தை விளைவிக்கும் என்று அஞ்சுகிறார்கள். தில்லி மாணவிக்கு நேர்ந்த கொடுமையில் தான், மாணவி பெயர் கடைசி வரை வெளியிடப் படவில்லை. அனு மதியில்லாமல் இந்த விவரங்கள் கொடுக்கப் படக் கூடாது என்பது தான் சரியானது. இச் சட்டம் இந்தப் பிரச்சனையைக் கணக்கில் எடுக்கிறது. பாலியல் வன்முறைக்கு உள்ளாக் கப்பட்ட சிறுவர், சிறுமியர் பெயரையும், அடை யாளத்தையும், சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி யில்லாமல் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்பது அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. காவல் துறையும் வெளியிடக் கூடாது என்பது தான் இதன் பொருள்.
இழப்பீடு/நிவாரணம்
சிறப்பு நீதிமன்றம் தாமாகவோ, அல்லது பாதிக்கப்பட்டோரின் மனுவின் அடிப்படை யிலோ தேவையைப் பொறுத்து இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். இறுதியில், குற்றவாளி தண்டனை பெற்றாலும், விடுவிக் கப்பட்டாலும் நிவாரணம் வழங்கலாம். குற்ற வாளியை அடையாளம் காண முடியாவிட் டாலும், தலைமறைவாகப் போய் விட்டாலும் கூட, இழப்பீடு வழங்கலாம். உடல் காயம், மன உளைச்சல், மருத்துவச் செலவு, குடும்பத் தின் பொருளாதார நிலை ஆகியவற்றைக் கணக்கில் எடுக்க வேண்டும். மன/உடல் நிலை சரியில்லாமல் அல்லது விசாரணை, வழக்குக்குச் செல்வதற்காகப் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அதையும் கணக் கில் எடுக்க வேண்டும். எச்.ஐ.வி. தாக்கியிருந் தால், கர்ப்பமாகி விட்டால், ஊனமடைந்து விட் டால் அவையும் எடுத்துக் கொள்ளப்பட்டு, இழப்பீடு வழங்கப் பட வேண்டும். மாநில அரசே நிவாரணத் தொகையை வழங்க வேண் டும். நீதிமன்ற உத்தரவு பெற்று 30 நாட் களுக்குள் இது அளிக்கப் பட வேண்டும்.
இவ்வளவு வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிந்தால்தானே, பாதிக்கப்பட்ட குழந்தை யும், பெற்றோரும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்? இவை குறித்து அவர்களுக் குக் கூறப்பட வேண்டும் என்பது இச்சட்டத் தின் கீழ் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. அதே போல் வழக்கின் விவரம் அவ்வப்போது அவர் களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
தேசிய/மாநில குழந்தைகள் உரிமை பாது காப்பு ஆணையம் தான் இச்சட்டத்தின் அம லாக்கத்தைக் கண்காணிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் இது வரை மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையமே அமைக்கப்படவில்லை. இது முதலுக்கே மோசமான நிலை அல்லவா?
எனவே, தமிழக அரசு, உடனடியாகக் குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும். மேற்கூறிய சட்டத்தை அமலாக்கக் கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். போதுமான காவலர்கள், அரசு அதிகாரிகளை நியமனம் செய்ய வேண் டும். இது குறித்து விளம்பரப் படுத்த வேண் டும். முறையாக விசாரிக்காத, சட்டப் படி நடந்து கொள்ளாத அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இதர கோரிக்கைகளுடன், இச்சட்டம் குறித்த ஸ்தூலமான அம்சங்களையும் இணைத்து, தமிழகமெங்கும் வன்முறைக்கு எதிராகக் கனல் மூட்டுவோம்.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு போராடியவர்கள் மீது காவல்துறை அடக்குமுறை, அராஜகம், வெறிச்செயல் (படங்கள்)
கணவனால் ஏமாற்றப்பட்ட பெண்ணிற்கு நீதிகேட்டுப் போராடிய உ.வாசுகி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீது மிகக் கொடூரமான முறையில் அடக்குமுறைகளை ஏவி குண்டுக்கட்டாக் தூக்கிப்போட்டு கைது செய்து வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது காவல்துறை.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த கே.கே.கனியத்தா மகன் இப்ராம்ஷா என்கிற சாய்காவியன்.; டி.வி. நிருபரான இவர் தான் தாய், தந்தை இல்லாத அனாதை இந்து எனக்கூறி சென்னையிலுள்ள காஞ்சனா என்கிற பெண்ணை 2006ல் திருமணம் செய்துள்ளார்.
85 சவரண் நகை, 25 லட்சரூபாய் ரொக்கம், ஒரு கார் என வரதட்சினையும் பெற்றுள்ளார். இவர்களுக்கு தீபேஷ் என்கிற ஐந்து வயது மகன் உள்ளான்.
இந்நிலையில் வரதட்சனையாகப் பெற்ற நகை மற்றும் பணத்துடன் சாய்காவியன் சில மாதங்களுக்கு முன்பு தலைமறைவாகி விட்டார். இது குறித்து காவல் துறையில் புகார் கொடுத்த காஞ்சனா, ஆலங்குடியில் உள்ள கணவர்; வீட்டு முன்பு நியாம் கேட்டு இரண்டுவார காலம் சத்தியாகிரகப் போராட்டத்தையும் நடத்தினார்.
ஆனால் குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை. சென்னையில் படித்துக் கொண்டிருந்த மகனை புதுக்கோட்டையில் வைத்துக் கொண்டு தங்குவதற்குக்கூட இடமில்லாமல் கடந்த மூன்றுமாத காலமாக காஞ்சனா அல்லாடிக்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கேட்டு காஞ்சனாவை அவரது கணவர் வீட்டில் குடியமர்த்தும் போராட்டத்தை 08.11.2012 அன்று நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்தது. போராட்டத்தன்று ஆலங்குடியில் டிஎஸ்பி செல்லபாண்டியன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்னர். கட்சினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாகச் செல்லவோ, ஒலிபெருக்கி மூலமாக விளக்கவோ போலீசார் அனுமதிக்கவில்லை.
காஞ்சனாவிற்கு நியாயம் கேட்டு முழக்கங்கள் எழுப்ப ஆரம்பிக்கும் போதே தேசத் துரோக குற்றத்தை செய்துவிட்டதைப் போல போலீசார் அடக்குமுறையை ஏவிவிட்டனர். ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கக்கூட அனுமதிக்காமல் பாதி பேட்டியிலேயே டிஎஸ்பி செல்லபாண்டியன் அனைவரையும் வேனுக்குள் ஏற்றும்படி போலீசாரிடம் கூறினார்.
இதனைத் தொடர்ந்து தலைவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கியும், தரதரவென இழுத்தும் கைது செய்தனர். 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட போராட்டக்காரர்களை கைது ஆகவிடாமல் விரட்டியடிததும், ரிமாண்ட் செய்துவிடுவோம் நீங்கள் தீபாவளி கொண்டாட முடியாது என அச்சுறுத்தியும் கைது எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தனர்.
போலீசாரின் இத்தகைய காட்டுமிராண்டித் தனத்தை கண்டித்து போலீசார் சிறைக்குள் வழங்கிய மதிய உணவை மறுத்து கைது செய்யபட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினர்.
போராட்டத்திற்கு தலைமை வகித்த மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி செய்தியாளர்களிடம் பேசும் போது,
புகார் கொடுத்து பல மாதங்கள் கடந்தும் பலகட்டப் போராட்டங்களை நடத்தியும் குற்றவாளியை காவல்துறை கைது செய்யவில்லை. சாய்காவியனின் குடும்பம் வசதியானது என்பதால் அவர்களிடம் போலீசார் எதையோ எதிர்பார்த்து குற்றவாளியை தப்பிக்க விட்டிருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இம்மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க மாவட்ட காவல் துறை எவ்வித அக்கறைகும் செலுத்தவில்லை.
காவல்துறையினரின் செயல்பாடு மக்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் எங்களை கோரிக்கைகளைக்கூட எழுப்பவிடாமல் காட்டுமிராண்டித் தனமாக முறையில் கைது செய்துள்ளனர். இந்தப் போராட்டம் இத்துடன் ஓயப்போதில்லை. இது மாநிலம் தழுவிய போராட்டமாக வெடிக்கும் என எச்சரித்தார்.
போராட்டத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி, கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சின்னத்துரை, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.செபஸ்தியானர், எம்.உடையப்பன், எஸ்.பொன்னுச்சாமி, வி.துரைச்சந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் க.சிவக்குமார், எம்.பாலசுந்ரமூர்த்தி, டி.அன்பழகன், மாதர்சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, மாநிலக்குழு உறுப்பினர் பி.பூமயில், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.அன்புமணவாளன், ஆர்.வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாநில மகளிர் ஆணையத்திலும் அரசியல்: மார்க்சிஸ்ட்
மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி வேதனை
உ.வாசுகி
தமிழகத்தில்
பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு கண்டனம்கூட தெரிவிக்காத
அமைப்பாக மாநில மகளிர் ஆணையத்தின் செயல்பாடு உள்ளது. அந்த ஆணையத்துக்குள் அரசியல்
நுழைந்துவிட்டதே இதற்கு காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்
குழு உறுப்பினர் உவாசுகி தெரிவித்தார்.
நிகழ்ச்சி
ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக் கிழமை கோவை வந்த அவர், `தி இந்து’
தமிழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி:
பெண்கள்
பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஒருபக்கம் அதிகரித்து வருகிறது. அதேநேரம் பாலியல்
வன்கொடுமைகளும் அதிகரித்து வருவது போன்று உள்ளதே?
என்னதான்
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், பெண் பாதுகாப்பு தொடர்பாக ஆளும் கட்சியினர்
பெரிதாக நடவடிக்கை எடுக்காததே இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம்.
தெருத்தெருவுக்கு
மதுக் கடையை திறந்து வைத்துப் பணத்தை ஈட்டும் தொழிலில் அரசு ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு இருக்கையில் பெண்களுக்கு எதிராக தொடுக்கப்படும் வன்முறை அதிகரிக்குமே
தவிர, குறையாது.
மதுக்கடைகளை
எப்போது மாநில அரசு மூடுகிறதோ அப் போதுதான் பெண்களுக்கு எதி ராகத் தொடுக்கப்படும்
வன்முறை குறையும். வருமானம் மட்டுமே குறிக்கோள் என்ற அடிப்படையில் அரசு
செயல்படும்போது வெறும் விழிப்புணர்வால் மட்டும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்
குறைந்துவிடாது.
பெருநகரங்களில்
மட்டுமே பதிவாகும் வன்முறைகள் பெரிதுபடுத்தப்படுவதும், ஏனைய பகுதிகளில் பெரிதாகக்
கவனம் செலுத்தப்படாத நிலையும் உள்ளதே?
தமிழகத்தில்
கிராமங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உடனடியாக ஊடகங்கள் மூலமாக
வெளிக்கொண்டு வரப்படுகின்றன. ஆனால், நடைபெற்ற வன்முறைக்கு எதிராக விசாரணையும்,
நீதியும்தான் தாமதமாகிறது.
தமிழகத்தில்
செயல்பட்டுவரும் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவியாக சுமார் 80 வயது நிரம்பிய
ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மகளிர் ஆணையத்தின் செயல்பாடுகளில்
அரசியல் நுழைந்துவிட்டது.
ஆளும்
அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு முறையும் தலைவியாக
நியமிக்கப்படுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் மாநிலத்தில் நடைபெறும் பெண்களுக்கு
எதிரான குற்றங்கள் குறித்து எவ்வாறு அவர்களால் கண்டனம் தெரிவிக்க முடியும்?.
பெண்களிடம்
விழிப்புணர்வு ஏற் படுத்துவதால் மட்டுமே வன்முறை யைக் குறைத்துவிட முடியுமா?
பாடப்
புத்தகங்களில் விழிப்புணர்வு கொண்டு வந்தால் மட்டுமே பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடாது.
சினிமா, குடும்பம், கல்விக்கூடம், மத நிறுவனங்கள், அரசு என 5 அமைப்புகளும்
ஒன்றிணைந்து பெண்கள் பாதுகாப்பு குறித்து ஒரு மித்த செயலிலும், விழிப்புணர்வு
நடவடிக்கையிலும் ஈடுபட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.
தற்போதைய
சூழ்நிலையில் நீங்கள் மாநில அரசிடம் வலியுறுத்த விரும்புவது என்ன?
மதுக்கடைகளை
மூட வேண்டும், மாநில மகளிர் ஆணையத்தின் செயல்பாடுகளில் அரசியலை நுழைக்காமல் இருக்க
வேண்டும்
இலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து அரசியல்
பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது: உ.வாசுகி
தமிழகத்தில்
இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்தே அரசியல் பேசும் சூழல் நிலவுவதை ஏற்றுக்கொள்ள
முடியவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்
உ.வாசுகி தெரிவித்தார்.
திருப்பூர்
மாவட்டம், உடு மலைப்பேட்டை, அடுத்துள்ள ஜல்லிபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் ஒன்றிய மாநாடு திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் நடைபெற்றது. அதில் கலந்து
கொள்வதற் காக வந்த உ.வாசுகி செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:
பொதுமக்கள்
தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைக்கூடப் போராட்டம் மூலமாகத்தான் பெற
வேண்டி யுள்ளது. அதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து விழிப் புணர்வை
ஏற்படுத்தி வருகிறது.
நாடு
முழுவதும் பெரும்பாலான குடும்பங்களில் பெண்களின் நிலை மிக மோசமாக உள்ளது.
பெண்களின் பங்கேற்பு இல்லாத போராட்டங்கள் முழுமை அடை யாது. 1960-களில் மாநில
மக்களின் உரிமைகளை திமுக முன் வைத்த போது அதை இடதுசாரிகள் ஆதரித்து, அவர்களுடன்
இணைந்து போராட்டம் நடத்தின. காலப்போக்கில் திராவிடக் கட்சி களின் வீரியம்
குறைந்துள்ளது.
1990-களுக்குப்
பிறகு நவீன தாராளமயமாக்கலால் மாநிலத்தில் உள்ள முதலாளிகளுக்கு, மத்திய ஆட்சியில்
பங்கேற்கும் வாய்ப்பு அமைந்தது. அதனால் திராவிட இயக்கங்கள் தங்களது அடிப்படை
கோட்பாடுகளை கைவிட்டுள்ளன. மாநில அரசுகளின் உரிமைகளை மீட்டெடுப்பதில் திராவிட
கட்சி களின் செயல்பாடுகள் பலவீனப் பட்டு, தற்போது எதிர்மறையாக செயல்படத்
தொடங்கியுள்ளன. பூதாகரமான விளம்பரங்கள், தனி நபரை துதிபாடுவது போன்றவை அதிகரித்துள்ளன.
தமிழர்
பிரச்சினை என்றால் அது இலங்கைத் தமிழர் பிரச்சினை யாக மட்டும்தான் பார்க்கப்படு
கிறது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்
கருத் தில்லை. ஆனால், தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்தே அரசியல்
பேசும் சூழல் நிலவுகிறது. இதை மார்க்சிஸ்ட் களால் ஏற்றுக்கொள்ள முடிய
வில்லை.தாராளமயமாக்கல் மூலம் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி தான் உள்ளது. படிப்புக்கேற்ற
வேலைவாய்ப்புகள் சுருங்கிக் கொண்டே வருகின்றன. அதனால் இளைஞர்களின் எதிர்காலம்
கேள்விக்குறியாகியுள்ளது.
சமீப
காலமாக பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்
திலும் நடைபெறுகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் இல்லையா?,
அவர்களுக்காகப் போராட தமிழ் தேசிய அமைப் புக்கள் ஏன் முன் வருவதில்லை?.
இந்தியாவில்
சில கார்ப்பரேட் ஊடகங்கள் இடது சாரிகள் மீது அவதூறு செய்திகளைப் பரப்பி வருகின்றன.
பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்துக்கும், சீத்தாராம்யெச்சூரிக்கும் இடையே பிரச்சினை
உள்ளதாக தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
கம்யூனிஸத்தை
விட்டு சமூக ஜனநாயகக் கட்சியாக மாறவேண்டும் என இடதுசாரிகள் மீது அத்தகைய ஊடகங்கள்
கருத்து தெரிவித்துள்ளன. இதன் மூலம் ஊழல், சுரண்டலுக்கு எதிராக மிகப்பெரிய
போராட்டங்கள் எதுவும் உருவாகக் கூடாது என அவை விரும்புகின்றன என்றார்.
பதற வைக்கும் பாலியல் கொடுமைகள் - உ.வாசுகி
மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 33707 பாலியல் வல்லுறவு வழக்குகளில் 94 சதவிகித வழக்குகளில், குற்றவாளிகள் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தெரிந்தவர்கள்
தேசிய குற்றப் பதிவு அமைப்பின் 2013க்கான புள்ளி விவரத்தின் படி, இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 93 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப் படுகிறார்கள். நாடு முழுவதும் 2012ல் 24923 பாலியல் வல்லுறவு வழக்கு கள் பதியப்பட்டன, ஆனால் 2013ல் அது 33707 ஆக உயர்ந்திருக்கிறது. மாநகரம் என்று எடுத்துக் கொண்டால், தில்லி, 1441 வழக்குகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. மாநிலம் என்றால், மத்திய பிரதேசம் 4335 வழக்குகளுடன் முதல் இடம் பெற்றுள்ளது. இதற்குப் பின்னால், ராஜஸ்தான் (3285), மஹாராஷ்டிரா (3063), உபி (3050) ஆகிய மாநிலங்கள் வருகின்றன.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 33707 பாலியல் வல்லுறவு வழக்குகளில் 94 சதவிகித வழக்குகளில், குற்றவாளிகள் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தெரிந்தவர்கள். அதாவது, பெற்றவரே செய்தது 539, உறவினர்கள் 2315, அண்டை வீட்டுக்காரர்கள் 10782, மற்றபடி தெரிந்தவர்கள் 18171. பாதிக்கப் பட்ட பெண்களின் வயது என்று பார்த்தால், 8877 பேர் 14-18 வயது வரம்பிலும், 15556 பேர் 18-30 வரம்பிலும் உள்ளனர். மொத்தத்தில் 2854 வழக்குகளில் குற்றவாளிகள் பெற்றவரும், உற்றவரும் தான். முன்னேயும், பின்னேயும் தெரிந்தவர்களே இந்தக் கொடுமையில் ஈடுபடும் போது, முன்ன பின்ன தெரியாதவர்களுடன் பேசாதே என்று அறிவுரை கூறுவதில் என்ன பொருள் இருக்க முடியும்? தஞ்சையில் மாதர் சங்கம் நடத்திய பொதுவிசாரணையில் மேடைக்கு வந்த இளம் பெண் சொன்ன விவரங்கள் நம் ரத்தத்தை உறைய வைத்தன. பெற்றெடுத்த தந்தையே, 3 ஆண்டுகளாக இப்பெண்ணுடன் குடும்பம் நடத்தி, 3 குழந்தைகள் பெற வேண்டிய அவலம்; கடைசி குழந்தை தனக்குப் பிறக்கவில்லை என்று சந்தேகம் வேறு, அதனால் அந்தக் குழந்தைக்குத் தாய் பால் கிடைக்கக் கூடாது என்று பால் கொடுக்கும் இடத்தையே பிளேடால் அறுத்த கொடுமைகளை அந்தப் பெண் விவரிக்கும் போது அரங்கமே அதிர்ச்சியில் விழுந்தது.
போபாலில் 65 வயதானவர், தன் பேத்தியை 5 மாதங்களுக்கும் மேலாகப் பாலியல் உறவுக்குப் பயன்படுத்தி, கர்ப்பமான போது கர்ப்பத்தையும் கலைத்திருக்கிறார். உடுமலையில் தந்தையின் பாலியல் தொந்தரவு தாங்க முடியவில்லை என்று 2 மகள்கள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.பெண்ணை ரசிக்கிற, ருசிக்கிற, அனுபவிக்கிற போகப் பொருளாகப் பார்க்கும் பார்வை வலுப்பட்டுள்ளது. மனித உறவுகள், மாண்புகள் சீரழிந்துள்ளன. கலாச்சாரம் காணாமல் போய்விட்டது. கலாச்சார காவலர்கள் இவை குறித்தெல்லாம் வாயை இறுக மூடிக் கொள்வது ஏன்? நம்ம சாதி பொண்ணு மேல கை வச்சா, கைய வெட்டு என்றுமுழங்கும் காடுவெட்டிகள் என்ன செய்கிறார்கள்? கலாச்சாரம் கெட்டு விட்டது என்று குஷ்புவை விரட்டியவர்கள் இன்று எங்கே? நீ சுகப்பட்டால் போதும், மற்றதைப்பற்றிக் கவலைப்படாதே என்று கலாச்சார மதிப்பீடுகளைத் திருத்திஎழுதிய உலகமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு இதில் பங்கில்லையா?
கும்பல் பலாத்காரம்
தமிழகத்தில் 2013ல் 923 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது ஒரு நாளைக்கு 3 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகின்றனர். 2012ல் இந்த எண்ணிக்கை 737 ஆக இருந்து, ஓராண்டில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது. குழந்தைகள் மீதான வல்லுறவு என்று பார்த்தால் 48 வழக்குகள் 2013ல் பதிவு செய்யப்பட்டுள்ளன. பத்திரிகை செய்தி களைப் பார்க்கும் போது, இந்த விவரம் முழு உண்மையல்ல என்று தோன்றுகிறது. இருப்பினும் இந்த விவரமே சொல்லுவது என்னவென்றால், தினசரி சராசரியாக ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.கும்பல் பலாத்காரம் குறித்த தனி யான பதிவுகள் கிடைக்கவில்லை.
ஆனால் பெரும்பாலும் நாம் பார்க்கும் செய்திகள், இந்தியா முழுதும் இது அதிகரிப்பதாகத் தெரிவிக்கின்றன. சமீபத்தில் கிருஷ்ணகிரியில் ஒரு கல்லூரி மாணவிக்கு நடந்தது, முன்னதாக காரைக்காலில் புத்தாண்டு தினத்தன்று நடந்தது, ஹரியானா, உத்தர பிரதேச நிகழ்வுகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். யாருக்கும் தெரியாமல் குற்றம் செய்ய வேண்டும் என்ற குறைந்த பட்ச குற்ற உணர்வு கூட அற்றுப் போய்விட்டது. ஏனெனில் இது குற்றம் என்பது போய் ஒரு பொழுதுபோக்காக ஆகிக் கொண்டிருக்கிறது. அனைவரும் சேர்ந்து செய்வதில் ஒரு ஜாலி, அந்தப் பெண் தவிப்பது, அலறுவது, துன்புறுவதைப் பார்ப்பதில் ஒரு அலாதி இன்பம். இந்த உலகம் தனக்கு இழைக்கும் துரோகத்துக்கு, தான் முன்னேறாததற்கு, நினைத்தது கிடைக்காததற்கு என்று எல்லாவற்றுக்குமான பதிலும், நிறை வும் இதில் கிடைத்து விடுகிறது. ஆண்மையின் ஆளுமை வெற்றி பெறுவதான நினைப்பு! வன்முறையைப் பொழுதுபோக்காக்கியதில் சினிமாவுக்கு முக்கிய பங்குண்டு.
காரணங்களைத் தேடு
குடி போதை, வன்முறைக்கு ஒரு பிரதான காரணமாக முன்னுக்கு வரு கிறது. குடிக்காதவர்கள் அப்பாவிகள், குடிப்பவர்கள் குற்றவாளிகள் என்று ஒரு சூத்திரத்தை எழுத முடியாது. ஆனால் வன்முறை செய்வதற்கான துணிச்சலை, போதை உற்பத்தி செய்கிறது. பெரும்பாலான சம்பவங்களில் குற்றவாளிகள் குடித்திருந்தார்கள் என்னும் செய்தி, இதை வெளிப்படுத்துகிறது. தமிழக அரசின் மதுபானக் கொள்கைக்கு இதில் பங்குண்டு. ஊக்கப்படுத்தி ஊற்றிக் கொடுக்கும் வேலையை அரசு செய்ய வேண்டுமா? லாபம் பார்க்கும் பிசினசாக இதைப் பார்த்து, குடி குடியைக் கெடுக்கும் என்று சட்ட ரீதியான எச்சரிக்கையை சிறு எழுத்தில் போட்டு விட்டால் போதுமா? போதை பழக்கத்தைக் குறைப்பதற்கான முயற்சியோ, பிரச்சாரமோ அறவே இல்லையே?அடுத்து, மொபைல் இருந்தாலே போதும், சுலபமாக இணைய தளத்தில், யூடியூபில் ஆபாசத்தைப் பார்த்துவிட முடிகிறது.
பிறகு, பார்ப்பதை எல்லாம் பரீட்சித்துப் பார்க்கத் தோன்றுகிறது. அதற்கு ஒரு பெண் வேண்டும், ஒரு வயதாக இருந்தால் என்ன, 80 வயதாக இருந்தாலென்ன என்கிற மனநிலை ஏற்படுகிறது. இதை எதிர்கொள்வது குறித்து சிந்திக்க வேண்டும். அத்துடன், காவல்துறை விசாரணை, நீதிமன்ற நிகழ்வுகள் போன்றவை எல்லாம், பாதிக்கப்பட்டவர்களை நோகடிப்பதாகவே இருக்கின்றன. காலம் கடந்த நீதி அர்த்தமிழக்கிறது. 25 சதவிகிதம் குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை கிடைக்கும் யதார்த்தம் தவறு செய்பவர்களுக்கே அனுகூலமாகி விடுகிறது. நிர்பயா வழக்குக்குப் பிறகு புதிதாக வந்த சட்டத் திருத்தத்தில், அரசு அதிகாரி அல்லது காவல் அதிகாரி சட்டப் படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தண்டனை என்று உள்ளது.
இந்த இபிகோ பிரிவு 166 ஏ என்பதை அமல்படுத்த அரசு முன்வர வேண்டும். இல்லையேல் பொள்ளாச்சி சம்பவத்தில் தமிழக முதல்வர் வேகம் காட்டியவுடன் செயல்பட்ட அதிகாரிகள், மற்றவற்றில் மெத்தனமாக இருந்து விடும் ஏற்பாடு உள்ளது. எல்லாவற்றிலும் முதல்வர் வேகம் காட்ட வேண்டும் என்பதும் இதிலிருந்து தெரிகிறது. இந்த 166ஏ என்ற பிரிவு வரக் காரணமாக இருந்தது ஜனநாயக மாதர் சங்கம்; இதை வடிவமைத்தது மாதர் சங்கத்தின் அகில இந்திய சட்டப்பிரிவு பொறுப்பாளர் வழக்கறிஞர் கீர்த்தி சிங் என்பது குறிப்பிடத்தக்கது. தப்பு செய்யாத, திருடாத, பொய் சொல்லாத மனிதன்தான் கதாநாயகன் என்பது மாறி, குடிப்பவர்கள், சமூக விரோத செயல்களை செய்பவர்கள், பெண்களைப் பாலியல் சீண்டல் செய்பவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக அதை நியாயப்படுத்தி, கதாநாயகன் பாத்திரமாக உலா வருகிற படங்கள் கணிசமாக வருகின்றன. இவர்கள் இன்றைய சமூகத்திற்கு தவறான முன்மாதிரியாக மாறுகிறார்கள்.
திசை திருப்பக் கூடாது
காரணங்கள் இப்படியாக இருக்கும் போது, பெண்ணின் உடை காரணம், ஆண் நண்பருடன் போனது காரணம், இந்த நேரத்தில் தெருவில் நின்றது காரணம் என்ற அபத்தங்களை ஏன் பேச வேண்டும்? எந்த உடை அணிந்தால், எந்த நேரத்தில், எந்த இடத்தில் இருந்தால் பிரச்சனை வரவே வராது என்று சொல்வார்களா? இப்படிப் பேசுவது திசை திருப்பும் போக்காகும். குற்றத்தை நியாயப்படுத்துவதாகும். மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியில் பாலியல் வல்லுறவு அரசியல் ஆயுத மாகவே பயன்படுத்தப்படுகிறது. தபஸ் பால் இதற்கு ஓர் உதாரணம். ஹரியானா உள்துறை அமைச்சர், பாலியல் வல் லுறவு சில சமயம் சரி, சில சமயம் தவறு என்றார்.
முலாயம் சிங் யாதவ், பசங்க பசங்க தான் என்கிறார். கோவா முதல்வர், ஒரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டால் ஒரு இன்ஸ்பெக்டரைத் தான் சமாளிக்க வேண்டும், ஆனால் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் 26 இன்ஸ்பெக்டர்களை சமாளிக்க வேண்டும் என்று பேசி யிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான நடத்தை விதிமுறைகளில் (Code of Conduct) இப்படிப் பேசுவதையும் தகுதி இழப்புக் கான காரணமாக இணைக்க வேண்டும். மேலும் சாதியும், வர்க்கமும் முக் கிய காரணிகளாக இருக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்கள் கூடுதலாக வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள். மேற்கு வங்கத்திலும், ஜார்க்கண்டிலும் பழி வாங்கும் நடவடிக்கையாக சாதி பஞ் சாயத்தின் தண்டனையாக பாலியல் வன்முறை பயன்பட்டிருக்கிறது.
பொது வெளியில் பெண்கள் வருவதால்தான் வன்முறை நிகழ்கிறது என்று அவர்களைக் கட்டுப்படுத்துவதும், விலக்கி வைப்பதும் பிரச்சனையைத் தலைகீழாகப் பார்ப்பதாகும், பொது வெளியில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதி வர்மா குழு சொன்னது மிகப் பொருத்தமானது. பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் போது, நிச்சயம் குற் றங்கள் குறையும்.இதற்கு அரசு, நிர்வாகம், காவல் துறை, நீதித்துறை, ஊடகங்களின் நடவடிக்கைகள் நெறிப்படுத்தப்பட வேண்டும். பாடத்திட்டங்கள் பயன்பட வேண்டும். கல்வி, பொறுப்புள்ள குடி மக்களை உருவாக்க வேண்டும். கல்வி வணிகமயமாகும் போது, சமூக நீதிக்கும், சம நீதிக்கும் மதிப்பில்லாமல் போய் விடுகிறது. இதற்கு மத்தியில் நமக்கும் வன்முறை தடுப்பில் முக்கிய பங்குண்டு. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மக்களை சந்தித்து, ஆற்ற வேண்டிய பங்கு குறித்து விவாதிக்க திட்டமிட்டிருக்கிறது.
பெண்கள், குழந்தை கள் மீதான வன்முறையைத் தடுக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்வு, தமிழகத்தில் ஒரு லட்சம் குடும்பங்களை சந்தித்து நடத்தப்படும். ஆகஸ்டு 10 ஆம் தேதி துவங்கி சுதந்திர தினமான ஆகஸ்டு 15 ஆம் தேதி நிறைவு செய்யப்படும். சாதி மதம் பார்க்காமல், உள்ளூர் வெளியூர் நியாயம் பேசாமல், எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் பெண்களும், குழந்தைகளும் கண்ணியமாக வாழும் உரிமையைப் பாதுகாக்க உறுதி ஏற்க மக்கள் முன் வர வேண்டும்.
‘தமிழர் பிரச்சினையில் மாறுபட்ட நிலை
எடுக்கிறோமா?’! உ.வாசுகி சொல்கிறார்
vik26மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, இந்த இனம் அல்லது அந்த மதம் என்பதால் பிரச்சினையைப் பார்ப்பதோ அல்லது அதற்காகவே பாராமுகமாய் இருப்பதோ வழக்கம் அல்ல.
பிரிவினைவாதத்துக்கு இடம் கொடாமல், அதேசமயம் வர்க்கம், இனம், சாதியம், பாலினம் போன்றவற்றின் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் விதத்திலேயே கட்சியின் அணுகுமுறை உருவாக்கப்படுகிறது.
இதன் காரணமாகவே இந்தியாவின் பல பகுதிகளில் பிரிவினைவாதிகளின் கடுமையான விமர்சனத்துக்கும் நேரடியான தாக்குதல்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி ஆளாகி இருக்கிறது.
அசாமின் பிரிவினைவாதிகள் அசாமைப் பிரிக்கவில்லை என்றால், இந்தியா 26 துண்டுகளாக சிதறிப்போகும் என்று சொன்னபோது, என் உடல் 26 துண்டுகளாக்கப்பட்டாலும் இந்தியாவில் ஒரு துண்டு நிலம்கூட பிரிவினைவாதிகள் கையில் போவதை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னவர் நிரஞ்சன் தாலுக்தார் என்ற மார்க்சிஸ்ட்.
அதன் காரணமாகப் பிரிவினைவாதிகள் அவரது உடலை 26 துண்டுகளாக வெட்டிப் போட்டனர். காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கு எதிராகப் போராடுகிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் யூசுப் தாரிகமி, பலமுறை தீவிரவாதிகளின் கொலைவெறித் தாக்குதல்களுக்கு உள்ளானவர்.
பஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடியதற்காக குர்ணாம் சிங் உத்பல் உள்ளிட்ட பல பேரைக் களப்பலியாகத் தந்த இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
பிரிவினைவாதிகளுக்கு எதிராகப் போராடுகிற இடங்களில் எல்லாம் மார்க்சிஸ்ட்கள் அந்தக் குறிப்பிட்ட இன மக்களுக்கு எதிராக இருப்பதாக அவதூறு செய்வது வழக்கமான ஒன்றாகும். ஆள்வோரும் இதைத்தான் விரும்புகிறார்கள்.
தமிழர், தமிழ்நாடு என்று வந்தால் மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராமுகமாக இருப்பதாகச் சொல்வது, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. மொழிவாரி மாநிலங்களுக்காகக் குரல் கொடுத்ததில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கம்யூனிஸ்ட்கள் முன்நின்றனர்.
கம்யூனிஸ்ட்களின் இந்தப் பங்கை அங்கீகரித்துத்தான், தமிழ்நாடு கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனார் தனது உடலைக் கம்யூனிஸ்ட்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்று விரும்பினார்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ஆந்திராவும் தமிழ்நாடும் சென்னைக்காகப் போட்டியிட்டன. எல்லாத் தேசியக் கட்சிகளின் தலைவர்களும் தாங்கள் இருக்கும் பகுதியில் சென்னை இருக்க வேண்டும் என்ற இரட்டை நிலைப்பாடு எடுத்தனர்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒப்பற்ற தலைவரான தோழர் பி.சுந்தரய்யா, ‘சென்னை, தமிழர்களுக்குச் சொந்தமானது. அது, தமிழ்நாட்டுடன்தான் இருக்க வேண்டும்’ என்று ஆந்திராவில் இருந்து குரல் கொடுத்தார்.
தற்போதைய தெலங்கானா பிரச்சினையில் ஆந்திராவில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் அவரவர் வாழ்கின்ற பகுதிக்குத் தகுந்தாற்போல் தனி தெலங்கானா என்றோ, ஒன்றுபட்ட ஆந்திரா என்றோ, பிளவுபட்டு நிற்கின்றனர். இரண்டு பகுதிகளிலும் இருக்கிற மார்க்சிஸ்ட்கள் மாத்திரமே ஒன்றுபட்ட ஆந்திரா என்பதை உரத்துச் சொல்கின்றனர்.
தமிழகத்தின் கருத்துச் சூழல் சமீப காலமாக ஆரோக்கியமற்றதாக ஆக்கப்பட்டுக்கொண்டிருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது. மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பவர்களை, கருத்துக்களின் தகுதிப்பாட்டில் இருந்து விமர்சிப்பது இல்லை.
மாறாக அவை எல்லாம் ஓர் இனத்துக்கு, சாதிக்கு, மதத்துக்கு விரோதமானவை என்றும் அந்த கோரிக்கையை வைக்கிறவர்கள் துரோகிகள் என்றும் முத்திரை குத்தப்படுகிறார்கள்.
விவாதங்களில் இருந்தும், விவரங்களில் இருந்தும்தான் உண்மைகளைத் தேட முடியும். தான் சொன்னதற்கு வேறுபட்ட கருத்துச் சொன்னால், சொன்னவர் துரோகி என்ற பிம்பத்தை உருவாக்குவது பாசிஸப் போக்கு. மிக அபாயகரமானது.
அடுத்ததாக, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக இங்கு நடந்த மாணவர் போராட்டம் பற்றித் தோழர் தமிழ்ச் செல்வன் குறிப்பிட்டதை, ”லயோலா நிர்வாகம் என்றால், கிறிஸ்தவர்களாம். கிறிஸ்தவப் பின்னணி என்றால், அமெரிக்காவாம். அமெரிக்காவின் தூண்டுதலால் இந்தப் போராட்டம் நடந்ததாம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூளைக்குத்தான், இப்படி உள்நோக்கம் எல்லாம் கற்பிக்க முடியும்!” என்று இல்லாத நோக்கமும், சொல்லாத வார்த்தைகளும் மார்க்சிஸ்ட் கட்சியின் மீது கற்பிக்கப்படுகிறது.
இது அபாண்டம். முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்றோ, கிறிஸ்தவர்கள் என்றாலே அமெரிக்கா என்றோ ஒருபோதும் மார்க்சிஸ்ட் கட்சி சிந்தித்தது கிடையாது.
இந்தியாவின் மதவழி சிறுபான்மை மக்களை அவ்வாறு கொச்சைப்படுத்துவதைக் கண்டிக்கிற இயக்கம் மார்க்சிஸ்ட் கட்சி. சிறுபான்மை மக்களின் நியாயமான உரிமைகளுக்காகக் கட்சி போராடுகிறது.
அதனால்தான் கட்சி உறுப்பினர்களாகவும், சில மாநிலங்களில் கட்சியின் தளமாகவும் சிறுபான்மை மக்கள் இருக்கிறார்கள். அதேபோல், மார்க்சிஸ்ட் கட்சி அமெரிக்க மக்களுக்கு எதிரானது அல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு மட்டுமே எதிரானது.
இன்று இடதுசாரிப் பாதையில் திரும்பியிருக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் ஏறத்தாழ அனைவருமே கிறிஸ்தவர்கள்தான்.
அதற்காக அவர்களெல்லாம் அமெரிக்கப் பின்னணிகொண்டவர்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒதுக்கிவைக்கவில்லையே? சொல்லப்போனால், அந்த அரசுகள் கடுமையாக அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையைத்தான் எடுக்கின்றன.
சாதி மதத்துக்கு அப்பால் நின்று, மனிதகுலத்தின் மிக உயர்ந்த பண்புகளான சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவத்தை உயர்த்திப் பிடித்து வர்க்கச் சுரண்டலற்ற சமுதாயத்தை உருவாக்குவதே கம்யூனிஸத்தின் இலட்சியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக