சிபிஎம் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு பேரணி-பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது

புதுக்கோட்டை, ஜன.7-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட 12-வது மாநாடு பேரணி-பொதுக்கூட்டத்துடன் புதுக்கோட்டையில் புதன்கிழமையன்று எழுச்சியுடன் தொடங்கியது.புதுக்கோட்டை பால்பண்ணை ரவுண்டானாவிலிருந்து மாலை 5 மணியளவில் தொடங்கிய பேரணியை கட்சியின்மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஒன்றியங்கள் வாரியாக செந்தொண்டர் அணிவகுப்பு, குதிரை ஆட்டம், தப்பாட்டம், நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு கிராமியக் கலை நிகழ்ச்சிகளோடு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க செம்படைப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான சின்னப்பா பூங்காவில் நிறைவடைந்தது.அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எம்.சின்னத்துரை தலைமை வகித்தார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் எம்எல்ஏ., ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜசேகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.செபஸ்தியான், க.செல்வராஜ், ஏ.ராமையன், எம்.முத்துராமலிங்கன், எம்.உடையப்பன், எஸ்.சங்கர், எஸ்.கவிவர்மன், என்.பொன்னி, எஸ்.பொன்னுச்சாமி, கே.சண்முகம், ஏ.ஸ்ரீதர், வி.துரைச்சந்திரன், வரவேற்புக்குழுத் தலைவர் சண்முக பழனியப்பன் ஆகியோர் பேசினர்.
முன்னதாக நகரச் செயலளார் சி.அன்புமணவாளன் வரவேற்க, மாவட்டக்குழு உறுப்பினர் டி.சலோமி நன்றி கூறினார்.பிரதிநிதிகள் மாநாடு வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்தப் பக்கத்தின் எழுத்தளவையும் (ஃபாண்ட் சைஸ்) பெரிதுபடுத்திப் போட வேண்டுகிறேன்.
பதிலளிநீக்கு