தருமபுரி,
ரேசன் முறையை ஒழிக்க மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி குற்றம் சாட்டினார். பாப்பாரப்பட்டி மற்றும் பிக்கிலி ஊராட்சி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றன. பகுதிக்குழுச் செயலாளர் வே.விசுவநாதன், பிக்கிலியில் பகுதி குழு உறுப்பினர் ஆர்.சின்னசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி, மாவட்டச் செயலாளர் ஏ. குமார், செயற்குழு உறுப்பினர் ஆர். சிசுபாலன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். சின்னசாமி, ஆர்.கே. பெருமாள், ராஜமணி, சஞ்சீவன், காமராஜ், அன்பரசு, கிட்டு, அருள்மொழி, லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் உ. வாசுகி பேசுகையில், “மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தில் தமிழக அரசு இணைத்து கொண்டதால் 50 விழுக்காடுதான் ரேசன் மத்திய அரசு வழங்குகிறது. அரிசி பருப்பு குறைவாக வழங்குகிறது. ஒட்டு மொத்தத்துக்கும் வழங்கவேண்டிய மண்ணெண்ணையில் 44 விழுக்காடுதான் தான் மத்திய அரசு வழங்குகிறது. ரேசன் பொருட்களை முழுமையாக வ
ழங்காமல் இருக்கும் மத்திய அரசு முதல் குற்றவாளி. இதைக்கேட்காமல் இருக்கும் தமிழக அரசு இரண்டாம் குற்றவாளி” என்றார்.

பல ஆண்டுகளாக அனுபவவித்துவரும் விவசாய நிலங்களுக்கு அரசு பட்டா வழங்க மறுக்கிறது. ஆனால் கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் நல்ல நீர்ப்பிடிப்பு உள்ள நிலத்தை வகைமாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் ஜக்கிவாசுதேவுக்கு வழங்கியுள்ளது. விவசாயிகள் மீது தமிழக அரசுக்கு அக்கறை இல்லை பயிர் கருகி 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். நிவாரணம் வழங்கவில்லை. எனவே விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை நாம் தொடர்ந்து போராட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.
பிக்கிலி ஊராட்சியில் சின்னாற்றின் குறுக்கே கூட்டாறு என்ற இடத்தில் தடுப்பணை கட்டி நீராதாரத்தை மேம்படுத்த வேண்டும். இவ்ஊராட்சிக்குட்பட்ட 12 கிராமங்களிலும் ஆழ்துளைகிணறுகள் வற்றிவிட்டது. ஒகேனக்கல் குடிநீர் கிடைக்கவில்லை. லாரிகள் மூலம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் சாகுபடி செய்து வரும் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், வனத்தை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் காட்டுபன்றி பயிர்களை சேதப்படுத்துகிறது. இதைத் தடுக்க கம்பி வேலி அமைக்க வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக