
திருச்சிராப்பள்ளி, ஜன.29-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தோழர்கள் உமாநாத், பாப்பாஉமாநாத் ஆகியோரின் நினைவு ஸ்தூபி திறப்பு நிகழ்ச்சி வியாழனன்று காலை திருச்சி பொன்மலை சங்கத்திடலில் நடந்தது.நிகழ்ச்சிக்கு மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். நினைவு ஸ்தூபியை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்களான உமாநாத், பாப்பா உமாநாத் இருவரும் இப்போது நம்முடன் இல்லை என்பது வருத்தமாக உள்ளது. பாப்பாவின் சிரிப்பும், உமாநாத்தின் முகபாவமும் என் கண்முன்னே நிழழாடுகிறது.
இவர்கள் இருவரும் பல்வேறு பாடங்களை நமக்கு கற்றுத்தந்த பல்கலைக்கழகமாக இருந்திருக்கிறார்கள். இருவரும் பல்வேறு விஷயங்களில் மாறுபட்ட தன்மைகொண் டவர்கள். தொழிலாளர்களின் நலனுக்கான அர்ப்பணிப்பு உணர்வுதான் இவர்களை ஒன்றிணைத்தது. புரட்சி என்ற இலக்கை முன்நிறுத்தி மனிதனை மனிதன் சுரண்டுகிற போக்கை எதிர்த்துப் போராடினார். நாம் தவறு செய்ய வாய்ப்பே இல்லை என்பதை உமாநாத் நமக்கு கற்றுத்தந்துள்ளார். பாப்பாவின் சுயேட்சையான சிந்தனை அனுபவங்களில் இருந்து நமக்கு பலவற்றை கற்றுத்தந்துள்ளார். ஒரு தொழிலாளி வர்க்க குடும்பத்தில் பிறந்து நமக்கு முன்னோடியாக இருந்துள்ளார்.தமிழக பெண்கள் முன்னேற்றத்திற்காக ஏராளமான பணிகளை செய்துள்ளார். அவரது பணி தமிழகத்து டன் நின்றுவிடவில்லை. துணிச்சல் தைரியம் ஆகிய குணங்கள் கொண்டவர் பாப்பா. எனக்கு மிகப்பெரிய உத்வேகம் உற்சாகம் கிடைக்க இந்த தலைவர்கள் காரணமாக இருந்துள்ளனர். சிந்தனை செயல் வாழ்க்கைஅனைத்திலும் இவர்கள் முழு கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தனர். இன்றைக்கு ஆளும் வர்க்கத்தால் தொடுக்கப்படும் பல்வேறு தாக்குதல்கள் கம்யூனிச சித்தாந்தத்திற்கு எதிரான போக்கு ஆகியவற்றை எதிர்கொள்ள இவர்களின் துணிச்சலும், உணர்வும் நமக்கு தேவை.
அவர்களது மகள்களையும் கம்யூனிஸ்ட்டுகளாக வளர்த்ததுதான் பெருமை அளிக்கும் விஷயம். இந்த நினைவுச்சின்னம் இந்தியா முழுவதும் இருக்கும் கம்யூனிஸ்ட்டுகளின் உணர்வால், உழைப்பால் எழுப்பப்பட்டது. இவர்கள் வழியில் நாம் செங்கொடியை உயர்த்திப் பிடிப்போம். என்றார்.
நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் அமிர்தம், அகில இந்திய ஜனநாயக மாதர்சங்க மாநில பொதுச்செயலாளர் சுகந்தி, மாநில தலைவர் வாலண்டினா, தட்சிண ரயில்வே எம்ப்ளாய்ஸ் யூனியன் செயல்தலைவர் இளங்கோவன் ஆகியோர் பேசினர். முன்னதாக மாநகர் மாவட்ட செயலாளர் கே.அண்ணாதுரை வரவேற்றார். புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்துராஜ் நன்றி கூறினார்.
கெட்டிப்படுத்துகின்றன
கவுரவக்கொலைகள் எதிர்ப்பு மாநாட்டில்
பிருந்தாகாரத் சாடல்

புதுக்கோட்டை, ஜன.29-
சாதிய அமைப்புகளை கெட்டிப் படுத்தும் வேலைகளை மத அடிப் படைவாதிகள் செய்கின்றனர் என் றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப் பினர் பிருந்தாகாரத்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கவுரவக் கொலைகள் எதிர்ப்பு மாநாடு புதுக்கோட் டையில் புதன்கிழமையன்று நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் பேசியதாவது:ஆண், பெண் இருவருக்கு இடையே இயல்பாக மலர்வது காதல். அது மனம் சம்பந்தப்பட்டது. சில சமயங்களில் தங்களது காதல் வேண்டாமென்று காதலர்கள் பிரிந்துவிடுவதும் நடப்பது உண்டு. இதில் வேறு நபர் உள்ளே நுழைவதற்கு இடமில்லை.
ஆனால், காதலர்கள் எடுக்கின்ற முடிவைத்தாண்டி வெளியி லிருந்து வரும் அரசியல் தலையீடு வெறுப்பாக மாற்றப்படுகிறது. கவுர வக்கொலை தானாக நடந்துவிடுவது கிடையாது. இதற்குப் பின்னால் அரசியல் வாதிகளின் வலுவான தலையீடு இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேடையிலிருந்து சொல்கிறோம். காதலர்களின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இதில் ஒரு போதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். சாதியை அல்லது மதத்தைத் தாண்டி இணையும் காதலர்களின் சவங்களில் நின்று ஓட்டுக் கேட்பது எங்கள் வழக்கமல்ல.ஹரியானாவில் சாதியின் பெயராலும், கர்நாடகம், உத்தரப்பிரதேச மாநிலங்களில் மதத்தின் பெயராலும் கவுரவக் கொலைகள் நடக்கின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட சில பகுதி களில் தாங்களுக்குள்ளாகவே சில அமைப்புகளை உருவாக்கி திட்ட மிட்டு இத்தகைய சதி வேலைகளில் ஈடுபடுகின்றனர்.பெரியார் பிறந்த தமிழகம் ஒரு காலத்தில் சமூக சீர்திருத்தத்திற்கான தளமாக இருந்தது.
இன்றுள்ள சில அரசியல் தலைவர்கள் பொதுமேடையில் பகிரங்கமாக சாதி பெரு மிதம் குறித்து பேசும் நிலை உள்ளது. இத்தகைய சூழலில் திராவிடக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் ஏன் மவுனம் சாதிக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். முற்போக்கான விசயம் குறித்து வாய்திறக்க மறுக்கும் இவர்கள் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குறித்தசண்டைகளில் மட்டுமே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.கவுரவக் கொலைகளுக்கு எதிரானப் போராட்டம் என்பது ஜனநாயகப் படுகொலைக்கு எதிரானப் போராட்டமாகும். சாதியும், தீண்டாமையும் இந்தியாவைப் பீடித்திருக்கிற சாபக்கேடாக உள்ளது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென் பதே எங்கள் லட்சியம். சாதிய முறையை ஒழித்துக்கட்டாமல் இது நிறைவேறாது என்பதில் உறுதி யாக இருக்கிறோம்.ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலின் பேரில் நடக்கும் மத்திய அரசு சாதிய கட்டமைப்பை பாதுகாப்பதற்கு மதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு இந்து பெண் இஸ்லாமிய இளைஞனைக் காத லித்தால் மிகப் பெரிய தாக்குதலை இந்த அமைப்புகள் நடத்துகின்றன.மத சடங்குகளைப் பயன்படுத் தாமல் திருமணம் செய்துகொள்ளும் உரிமையை சிறப்புத் திருமணச் சட் டம் வழிவகுக்கிறது. இத்தகைய திரு மணத்தில் ஆணோ, பெண்ணோ மதம் மாற வேண்டியதில்லை. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் இச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, கடினமான விசயமாக மாற்ற முயற் சிக்கிறார்கள். இத்தகைய திருத்தத்தின் காரணமாக மத்தியப் பிரதேசம் குவாலியரில் இந்துத்துவ சக்திகளின் சதியால் ஒரு பெண் தனியாக வாழும் அவலம் ஏற்பட்டுள்ளது.மத அடிப்படை வாதிகள் தங்க ளது மதத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டுமென்ற நோக்கில் திட்ட மிட்டுச் செயல்படுகின்றனர். எல்லா மதத்திலும் அடிப்படைவாதிகள் ஆணாதிக்கக் கட்டுப்பாட்டுக்குள் பெண் இருக்க வேண்டும் என நினைக் கிறார்கள். அன்பு செலுத்துவதையே மதங்கள் போதிக்கின்றன. இரண்டு அன்பு உள்ளங்களை வெறுப்பது மதத்திற்கு எதிரானது என்பதை அடிப்படைவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசியல் சக்திகளின் தூண்டுத லோடு கவுரவக் கொலைகள் நடப்பது வெட்கக்கேடான விசயம். சாதி யின் பெயரால், மதத்தின் பெயரால் மற்றும் காவல் துறையின் துணையால் கண்ணுக்குத் தெரியாத குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதை தடுக்காத அரசும், ஆட்சியாளர்களும் சேர்ந்து செய்கிற குற்றமாகத்தான் நான் பார்க்கிறேன்.இத்தகைய கொடுமையை தடுக்கும் வகையில் வலுவான சட்டங்கள் கொண்டுவர வேண்டுமென நாடாளு மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ச்சியான போராட் டங்களை நடத்தி வருகின்றோம். அதையே இந்த மேடையிலும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு பிருந்தாகாரத் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
கவுரவம் இருக்கிறது
உ.வாசுகி கேள்வி
புதுக்கோட்டை, ஜன.29 -
சாதிமறுப்புத் திருமணம் செய்பவர் களை கவுரவக்கொலை செய்கிறார்கள். பெற்ற பிள்ளைகளைக் கொலை செய்வ தில் என்ன கவுரவம் இருக்கிறது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி.புதுக்கோட்டையில் புதன்கிழமை யன்று நடைபெற்ற கவுரவக்கொலை எதிர்ப்பு மாநாட்டில் அவர் பேசியதாவது:இந்திய அரசியல் சாசனம் மனுதர்ம சட்டங்களோடு இணைந்ததாக இருக்க வேண்டும் என்று சொன்ன ஆர்எஸ்எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் தற் பொழுது மத்திய அரசு இருக்கிறது.
மனு தர்மம் சூத்திரனுக்கு கல்வி கூடாது என்றது. சொத்து இருக்கக்கூடாது என்றது. அவர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எந்த சாதியில் இருந்தாலும் பெண்களை சூத்திரர் களாகவே கருதியது.சாதியப் படிநிலைகளை கெட்டியாகப் பற்றிநிற்கும் பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்கிறார்கள். தற்பொழுது பாடத்திட்டத்திலுள்ள தீண்டாமை ஒரு பாவச்செயல், அனை வரும் சமம் என்ற அம்சங்களை நீக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.இன்னும் ஒருபடி மேலே போய் இஸ்லாமியர்கள் வந்தபிறகுதான் தீண்டாமை யும் வந்தது என்கிறார்கள். மக்களை ஏமாற்ற நினைக்கும் இவர்கள் என்றைக் குமே ஆதாரங்களை முன்வைத்துப் பேசுவதில்லை. இட்டுக்கட்டியே கதையளக் கிறார்கள். சாதி என்ற ஏணிப்படி, ஒருபடியில் நிற்பவர் அடுத்த படிக்கு ஏற வோ, இறங்கவோ முடியாதபடிக்கு கெட்டி தட்டிப்போய் இருக்கிறது.சாதிமறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் தளிர்களை கவுரவக்கொலை செய்கிறார்கள்.
பிள்ளைகளை கொலைசெய்வதில் என்ன கவுரவம் இருக் கிறது. சமூகத்தில் சாதிமறுப்புத் திருமணங் கள் தாங்கமுடியாத குற்றமாகப் பார்க்கப்படுகிறது. பொதுவாக மக்களின் மனநிலை யிலேயே மாற்றம் வர வேண்டும். அதற்குதலித்துகளின் கையில் நிலம் வேண்டும்.
குறைந்தபட்ச கூலி வேண்டும். உயர் கல்விக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இவற்றோடு சேர்த்து பண்பாட்டுத் தளத்திலும் மாற்றம் வேண்டும் என்று குறிப்பிட்டார்.சாதிமறுப்புத் திருமணங்களை எதிர்க்கும் சாதிய அமைப்புகள் மீதும், பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றாத காவல்துறையினர் மீதும் களத்தில் நின்று தொடர்ச்சியாக போராட வேண்டிய கடமை கம்யூனிஸ்ட்டுகளுக்கு உண்டு. இவ்வாறு உ.வாசுகி தனது பேச்சில் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக